ADDED : ஜன 05, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை:கத்தியை காட்டி மக்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, அன்னாவரம் கிராமத்தில் மக்களுக்கு இடையூறாக, கத்தியை காட்டி ஒருவர் மிரட்டி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார்.
போலீசார், அவரிடம் விசாரித்தில் அவர், அன்னாவரம் மேட்டுக் காலனியைச் சேர்ந்த சேதுராமன், 21 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
