ADDED : ஆக 31, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
மணவாளநகர்: டீக்கடையில் ‘ஓசி’ சிகரெட் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடம்பத்துார், ஒண்டிக்குப்பம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் அப்துல் அஜித், 27. இவரது கடைக்கு, நேற்று முன்தினம் மாலை வந்த நபர், இலவசமாக சிகரெட் கேட்டார். அப்துல் அஜித் மறுக்கவே, அந்த நபர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதுகுறித்து விசாரித்த மணவாள நகர் போலீசார், டீக்கடைக்காரரை தாக்கிய அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பிரகாஷ், 24 என்பவரை, நேற்று கைது செய்தனர்.
