தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மொபைல் போன் டவரில் இருந்து குதிக்க முயன்றவரால் பரபரப்பு

 மொபைல் போன் டவரில் இருந்து குதிக்க முயன்றவரால் பரபரப்பு

 மொபைல் போன் டவரில் இருந்து குதிக்க முயன்றவரால் பரபரப்பு


ADDED : மே 20, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவரம்: சோழவரம் அருகே, மொபைல் போன் டவரில் ஏறி குதிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் டோல்கேட் அருகே, நேற்று போதை ஆசாமி ஒருவர், தனக்கு சொத்து பிரச்னை இருப்பதாகவும், புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி, அங்குள்ள 100 அடி உயர மொபைல் போன் டவரில் ஏறினார்.

அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோழவரம் போலீசார், அவரை சமாதானம் செய்து, கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தினர். இருந்தும் அந்த நபர், தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தபடி இருந்தார்.

அதே நேரம், தகவலறிந்து விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மொபைல் போன் டவரில் ஏறி சாதுர்ய மாக செயல்பட்டு, அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர்.

சோழவரம் போலீசாரின் விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ், 38, என்பதும், சோழவரம் டோல்கேட் பகுதியில் தங்கி, வடமாநில லாரி ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வந்ததும் தெரிந்தது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us