ADDED : ஜன 03, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி :ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், சத்தியவேடு நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் பாலாஜி, 41. இவர் நேற்று விஜயவாடாவில், பொறியியல் படிக்கும் மகளை கல்லுாரியில் விட்டுவிட்டு, வீடு திரும்புவதற்காக, சென்னை சென்ட்ரல் செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்தார்.
நேற்று மாலை, கவரப்பேட்டை ரயில் நிலையம் வரும்போது, விரைவு ரயில் மெதுவாக சென்றபோது, கவரப்பேட்டையில் இருந்து சத்தயவேடு பகுதிக்கு எளிதாக சென்று விடலாம் என எண்ணி, இறங்க முயற்சித்தார்.
இதில் நிலைதடுமாறி ரயிலில் சிக்கி, அவரது வலது கால் துண்டானதுடன், சம்பவ இடத்திலேயே இறந்தார். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

