/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கிலிருந்து விழுந்தவர் லாரி மோதி உயிரிழப்பு
/
பைக்கிலிருந்து விழுந்தவர் லாரி மோதி உயிரிழப்பு
ADDED : நவ 10, 2025 01:35 AM
ஆவடி:திருநின்றவூரில், பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்தவர், லாரி மோதி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சிவன்வாயில், தாவிதுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 58. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தில், திருநின்றவூர் காந்தி சிலையில் இருந்து, பாக்கம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
திருநின்றவூர் லட்சுமி திரையரங்கம் அருகே சென்ற போது, நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அந்நேரம் எதிரே வந்த கனரக லாரி, ஜெயராஜ் மீது ஏறி இறங்கியதில், இரண்டு கால்கள் நசுங்கி, ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.
தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மது போதையில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய, உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அஜய்குமார் நாயக், 51, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

