/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வங்கி குடியிருப்பு பகுதியில் திருடியவருக்கு சிறை
/
வங்கி குடியிருப்பு பகுதியில் திருடியவருக்கு சிறை
ADDED : ஜன 19, 2025 09:11 PM

கடம்பத்துார்: திருவள்ளூர் ஜே என்.சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் துணை மேலாளராக திலீபன், 37 என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
வங்கியின் பின்புறம் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பில் உள்ள மின்சாதன பொருட்கள் அவ்வப்போது மாயமாகி வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கி பாதுகாவலராக பணிபுரிந்து வந்த பாரதி, ஸ்ரீதரன் ஆகியோர் மேலாளர் திலீபனுக்கு போன் செய்து குடியிருப்பில் இருந்த மின்சாதன பொருட்களை ஒருவர் திருடும் போது பிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். திலீபன் திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் கும்பகோணத்தை சேர்ந்த ராஜா, 28 என்பது தெரிந்தது.
ராஜா மது குடிப்பதற்கு அவ்வப்போது இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். போலீசார் ராஜாவை கைது செய்தனர்.