/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
/
ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
ADDED : நவ 24, 2024 05:51 AM
பல்லாவரம்: குரோம்பேட்டை, நாகல்கேணி, சபாபதி நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார், 39. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
அதே விமான நிலையத்தில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த மேற்கு தாம்பரம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த தவான், 30 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தவான், சென்னை விமான நிலையத்தில், வருமானவரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், விமான நிலைய பணியிடங்களை நிரப்ப முடியும் என்றும், செல்வகுமாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய செல்வகுமார், தவான் கேட்டபடி, 1.20 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களை தவானிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பின், 15க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாய் வரை வாங்கி, தவானிடம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், தவான் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டோர் ஒன்று சேர்ந்து, நேற்று சென்னை பன்னாட்டு விமான நிலையம் சென்றனர். தவானை பிடித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.