/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணலிபுதுார் அய்யா கோவில் ராஜகோபுர ஆண்டு விழா
/
மணலிபுதுார் அய்யா கோவில் ராஜகோபுர ஆண்டு விழா
ADDED : பிப் 03, 2025 02:23 AM

மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், ஆண்டுதோறும், பிப்., 2ல், ராஜ கோபுர ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, 23ம் ஆண்டு ராஜ கோபுர ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை, பால் பணிவிடை, உகபடிப்பு, சிற்றுண்டி தர்மம், மதியம், பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது.
தொடர்ந்து, மதியம், பெண் பக்தர்கள் பால் அன்னம் எனும் வினோத பொங்கலிடும் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடந்தது.
விறகடுப்பில் பானை ஏற்றி, பச்சரிசி, பச்சைப் பயறு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, இனிப்பு, உப்பு இல்லாமல் பால் அன்னமிட்டனர்.
இந்நிகழ்வை, திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வராஜகுமார், துவக்கி வைத்தார். இதில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பால் பணிவிடை, உகபடிப்பு, மாலை அய்யா வைகுண்ட தர்மபதி இந்திர விமானத்தில் பதிவலம் வருதல், இரவு பாலன்னம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

