/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் மாரத்தான் போட்டி வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு
/
திருவள்ளூரில் மாரத்தான் போட்டி வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு
திருவள்ளூரில் மாரத்தான் போட்டி வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு
திருவள்ளூரில் மாரத்தான் போட்டி வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஏப் 01, 2025 08:08 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் 6ம் தேதி காலை 6:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில், 16 - 35 வயது வரையுள்ளோர் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை நகல், மருத்துவ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும். போட்டியில், முதலில் வரும் ஐந்து ஆண், பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும், 74017 03482, 80729 08634 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.