/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் துவக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் துவக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் துவக்கம்
ADDED : ஜன 07, 2026 06:38 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், வரும் பிப்., 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், 14 ஒன்றியங்களிலும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
நேற்று, இந்த முகாம் திருவள்ளூர் ஒன்றியத்தில் வேப்பம்பட்டு கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து, அனைத்து ஒன்றியங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில், தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட உள்ளது.
எனவே, இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

