/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் தேங்கும் இடங்களில் மருத்துவ முகாம்: கலெக்டர்
/
தண்ணீர் தேங்கும் இடங்களில் மருத்துவ முகாம்: கலெக்டர்
தண்ணீர் தேங்கும் இடங்களில் மருத்துவ முகாம்: கலெக்டர்
தண்ணீர் தேங்கும் இடங்களில் மருத்துவ முகாம்: கலெக்டர்
ADDED : அக் 22, 2025 10:38 PM
திருவள்ளூர்: மாவட்டத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் இடங்களில், சுகாதார துறை சார்பில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என, கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அங்கு கூடுதல் அலுவலர்கள், மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்ற மோட்டார், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டு உள்ளன.
பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பாக தங்க வைக்க புயல் பாதுகாப்பு மையம் - 2, பல்நோக்கு பாதுகாப்பு மையம் - 5 மற்றும் 669 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
தண்ணீர் தேங்கும் பகுதியில் ஏற்படும் நோய் பாதிப்புக்களுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.
நேற்று, 77 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு, 130 கி.மீ.,க்கு துார்ந்து போன கால்வாய், 15 ஆண்டுகளுக்கு பின் துார் வாரப்பட்டுள்ளது.
மேலும், 497 கி.மீ.,க்கு மழைநீர் வடிகால்வாய் துார்வாரப்பட்டுள்ளது. சிறுபாலம் - 4,852, பாலம் - 83 ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு, அடைப்புகளின்றி தண்ணீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, வினாடிக்கு 2,910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு கருதி, 4,000 அடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையில், இதுவரை ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. நான்கு கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்கள் புகார் அளிக்க, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

