/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவிலில் மருத்துவ மையம் அமைப்பு
/
பவானியம்மன் கோவிலில் மருத்துவ மையம் அமைப்பு
ADDED : ஏப் 13, 2025 09:03 PM
ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இதுபோன்ற நாட்களில், பக்தர்களின் அவசர மருத்துவ தேவைக்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பது பெரிய சவாலாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் மருத்துவ மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் தெரிவித்தார்.
நேற்று திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., செயலர் ரமேஷ் ராஜ் மருத்துவ மையத்தை துவக்கி வைத்தார். இதில், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

