/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவ காப்பீடு திட்டம் 1.81 லட்சம் பேருக்கு சிகிச்சை
/
மருத்துவ காப்பீடு திட்டம் 1.81 லட்சம் பேருக்கு சிகிச்சை
மருத்துவ காப்பீடு திட்டம் 1.81 லட்சம் பேருக்கு சிகிச்சை
மருத்துவ காப்பீடு திட்டம் 1.81 லட்சம் பேருக்கு சிகிச்சை
ADDED : அக் 26, 2024 07:51 PM
திருவள்ளூர்:விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், 1.81 லட்சம் பேர், 274 கோடி ரூபாய் மதிப்பில் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என, கலெக்டர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஓவிய போட்டி நடந்தது. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பிரபுசங்கர் பரிசு வழங்கி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 7,07,418 பேர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டை பெற்றுள்ளனர்.
மாவட்டம் முழுதும் 13 அரசு மருத்துவமனைகள், 40 தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 1,81,747 பேர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக, 274 கோடி ரூபாய் மதிப்பில் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சுகாதார இணை இயக்குநர் மீரா, மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.