/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீழ்கரமனுார் பஸ் நிறுத்தம் எதிரே ‛மெகா' பள்ளம்
/
கீழ்கரமனுார் பஸ் நிறுத்தம் எதிரே ‛மெகா' பள்ளம்
ADDED : மே 31, 2024 02:54 PM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில், பாலவாக்கம் அடுத்து, இடதுபுறம் சாலையில் உள்ள கீழ்கரமனுார்கண்டிகை கிராமம். இங்கு, 2 ,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இக்கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆறாவது வகுப்பிற்கு மேல் படிக்க ஊத்துக்கோட்டை அல்லது பெரியபாளையம் செல்கின்றனர்.
இப்பகுதியில் வசிப்பவர்கள் வேலைக்கு வெளியூர் சென்று வருகின்றனர். மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் போக்குவரத்தை நம்பி உள்ளனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர்.
இந்த நிறுத்தத்தின் முன் பகுதி நீர்வரத்து கால்வாய் உள்ளது. இதில் ஒரு பகுதி சிமென்ட் குழாய் புதைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. மீதி பகுதி எவ்வித குழாயும் அமைக்கவில்லை. இதனால் பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் பெரிய பள்ளம் போல் காணப்படுகிறது.
இரவு நேரங்களில் பேருந்தில் ஏற வேண்டிய அவசரத்தில் இந்த பள்ளத்தில் பயணியர் விழுந்து காயம் அடைகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் கீழ்கரமனுார் கண்டிகை நிறுத்தத்தில் உள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.