/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதியில்லாத மெய்யூர் கிராமம்
/
அடிப்படை வசதியில்லாத மெய்யூர் கிராமம்
ADDED : அக் 08, 2024 01:10 AM
ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் உள்ளது குருபுரம் பகுதி. இங்கு மலைவாழ் மக்கள், 47 குடும்பத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இன்றி தவிக்கின்றனர். அங்குள்ள குளம், குட்டைகளில் உள்ள தண்ணீர் தான் இவர்களின் தாகத்தை தீர்க்கிறது.
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு பகுதிகளிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மெய்யூர் ஊராட்சி, குருபுரம் பகுதியில் வசிக்கும் மலை வாழ் மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை பரிதாபத்திற்குரியது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட கலெக்டர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.