/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை பறிமுதல்
/
மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை பறிமுதல்
ADDED : டிச 18, 2025 06:38 AM
கும்மிடிப்பூண்டி: மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகள் மற்றும் உறிஞ்சக்கூடிய போதை காகிதங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை வைத்திருந்த நபரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகம் ஏற்படும்படி சுற்றித் திரிந்த நபரை விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் வைத்திருந்த உடைமையை சோதனையிட்டனர். அதில், 50 மெத் ஆம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் 25 உறிஞ்சக்கூடிய போதை காகிதங்கள் சிக்கின.
இவற்றின் மதிப்பு, 1 லட்சம் ரூபாய் எனக்கூறப்படுகிறது. இவற்றை பெங்களூரூவில் இருந்து கடத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக, கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பயாஸ், 25, என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

