/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைப்பு
/
ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைப்பு
ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைப்பு
ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைப்பு
ADDED : செப் 26, 2024 01:41 AM

திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, திருநின்றவூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளில், 2.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 5 மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா, பாரிவாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, கட்டடங்களை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம், பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி, அரசு கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், திருவள்ளுர் கலெக்டர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ.,க்கள் நாசர், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
அரசு மருத்துவமனைகளில், பெரிய அளவிலான மருத்துவ சேவை என்பது வளர்ந்து வருகிறது. இங்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதேபோல், சிறிய மருத்துவமனைகளிலும் அதிகம் பேர் சிகிச்சை பெற வருகின்றனர். எம்.பி., நீதிபதிகள், மத்திய அரசு ஊழியர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர், தமிழகத்தின் மருத்துவ சேவையை பயன்படுத்தி கொள்ள துவங்கி, ஐந்து ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசின் மருத்துவ சேவையை பயன்படுத்தி கொள்ள இணக்கம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, தமிழகத்தில் மட்டும் தான்.
திருவள்ளுர் மாவட்டத்தில், 63.75 கோடி ரூபாய் செலவில், 30 மருத்துவ கட்டடங்கள் மற்றும் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், திருவள்ளுர் மாவட்டத்தில், 236.63 கோடி ரூபாய் செலவில், 17 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், 14 துணை சுகாதார நிலையங்கள், ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடம், செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
வட்டார பொது சுகாதார அலகு, அல்ட்ரா சவுண்ட்ஸ் கேன் கருவி, பூந்தமல்லி துணை செவிலியர் பயிற்சி பள்ளி, மாணவியர் விடுதி கட்டடம், திருவெற்றியூர் - திருத்தணி - ஆவடி மருத்துவமனைகளில் கண் அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி கட்டடம் ஆகிய வசதிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடம், அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு, 10 கே.எல்., ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் ஆகிய வசதிகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.