/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் வருகை எதிரொலி அமைச்சர் ஆலோசனை
/
முதல்வர் வருகை எதிரொலி அமைச்சர் ஆலோசனை
ADDED : ஏப் 07, 2025 11:51 PM
திருவள்ளூர்,திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம் ஆண்டார்மடம் கிராமத்தில், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அவரது வருகை முன்னிட்டு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று முன்தினம், நடந்தது.
கூட்டத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனை விவரம்:
முதல்வர் பங்கேற்க உள்ள அரசு விழாவிற்கு பங்கேற்கும் பயனியாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதியை, அந்தந்த துறை அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கி, விழா மேடைக்கு அழைத்து வர வேண்டும். பொதுமக்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு வழங்க வேண்டும்.
மேலும், வாகன நிறுத்துமிடம், மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுப்பணி துறையினர், விழா நடைபெறும் இடம் மற்றும் மேடையை முறையாக ஆய்வு செய்து, உறுதி சான்று தர வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
கூட்டத்தில், எஸ்.பி., சீனிவாசபெருமாள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

