ADDED : டிச 08, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வடமாநில தொழிலாளி, ரயில் மோதி பலியானார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் புட்டானி சவுட்டன், 48. கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பம் கிராமத்தில் வசித்தபடி, கட்டுமான தொழில் செய்து வந்தார். இம்மாதம், 1ம் தேதி, அவர் மாயமானார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாயமான அன்று, கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் அருகே ரயில் மோதி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந் து சென்ற உறவினர்கள் அவரது உடலை அடையாளம் கண்டனர்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

