தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாயமான தொழிலாளி குளத்தில் சடலமாக மீட்பு

 மாயமான தொழிலாளி குளத்தில் சடலமாக மீட்பு

 மாயமான தொழிலாளி குளத்தில் சடலமாக மீட்பு


ADDED : மார் 05, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் மேலப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 46; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி காலை, இறைச்சி வாங்கி வருவதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக, பொன்னேரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று மெதுார் குளத்தில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், இறந்த நபர் ஜானகிராமன் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஜானகிராமனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ---------- அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us