/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : பிப் 15, 2026 06:34 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.
திருத்தணி ஒன்றியத்தில், கே.ஜி.கண்டிகை - செஞ்சம்மா கோணை, இ.என்.கண்டிகை - தாடூர் ஆகிய இடங்களுக்கு புதிதாக தார்ச்சாலை அமைத்தல், பட்டாபிராமபுரம் ஆசிரியர் நகர் பகுதியில் கான்கிரீட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், 1.10 கோடி ரூபாய் ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், மேற்கண்ட வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், இப்பணிகளை ஒன்றரை மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், நக்கீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.