UPDATED : அக் 14, 2026 07:03 PM
ADDED : அக் 14, 2026 07:00 PM
திருவாலங்காடு: மேட்டுப்பாளையம் கிராமத்தில், டூ –-- வீலரில் வந்தவரிடம் மொபைல் போன் பறித்து சென்ற மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமாபுரம், ரங்காபுரம், இலுப்பூர், சீதாபுரம், காவேரிராஜபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கிராம மக்கள் பலரும், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.
பணி முடிந்து இரவில், டூ – வீலரில் வரும் நபர்களை குறி வைத்து, சில நாட்களாக மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன், 42, என்பவர், திருவள்ளூருக்கு வேலைக்கு சென்று, வீட்டிற்கு டூ- – வீலரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, மேட்டுப்பாளையம் அருகே வழி மறித்த, டூ – வீலரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், தயாளனிடமிருந்த மொபைல் போனை பறித்து சென்றது.
இதுகுறித்து, தயாளன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
