ADDED : ஏப் 16, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் தேவ்ராஜ், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் வசித்தபடி, ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே பணிகள் மேற்கொண்டு வந்தார்.
அவரது அறையில் இருந்த மொபைல்போனை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 23, என்பவர் திருடிவிட்டு தப்ப முயன்றார். அவரை மடக்கி பிடித்த தேவ்ராஜ், ஆரம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.