ADDED : அக் 08, 2024 01:21 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி,
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 35. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரியை நிறுத்தி, உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, டூ--- வீலரில் வந்த மூவர், கத்தி முனையில் அய்யப்பனை மிரட்டி மொபைல்போனை பறித்து சென்றனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், வழிபறியில் ஈடுபட்ட பாலவாயில் பிரபு, 29, அருமந்தை ரிசிகேசவன், 22 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
