/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாதிரி வினா - விடை புத்தகம் விற்பனை
/
மாதிரி வினா - விடை புத்தகம் விற்பனை
ADDED : நவ 24, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,
திருவள்ளூர்கலெக்டர் பிரபுசங்கர்விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின், 10 மற்றும்பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில், தமிழ்மற்றும் ஆங்கில வழியில் மாதிரி வினா-விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பிற்கு மூன்று, 12ம் வகுப்பிற்கு எட்டு புத்தகம் என, 11 புத்தகம் அச்சிட்டு தமிழகம் முழுதும் மாவட்ட விற்பனை மையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகங்கள், திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, மற்றும் சோழவரம்அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

