ADDED : நவ 23, 2024 08:34 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்,:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாதிரி வினா-விடைத் தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பிற்கு 3, 12ம் வகுப்பிற்கு 8 புத்தகம் என, 11 புத்தகம் அச்சிட்டு தமிழகம் முழுதும் மாவட்ட விற்பனை மையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகங்கள், திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, மற்றும் சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
