/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் சுகாதார நிலையத்தில் நவீன மகப்பேறு அறை திறப்பு
/
கடம்பத்துார் சுகாதார நிலையத்தில் நவீன மகப்பேறு அறை திறப்பு
கடம்பத்துார் சுகாதார நிலையத்தில் நவீன மகப்பேறு அறை திறப்பு
கடம்பத்துார் சுகாதார நிலையத்தில் நவீன மகப்பேறு அறை திறப்பு
ADDED : ஜன 26, 2025 02:12 AM
திருவள்ளூர்:கடம்பத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவீன மகப்பேறு அறை நேற்று திறக்கப்பட்டது.
திருவள்ளுர் வட்டம், கடம்பத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு அறையினை தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து, 15 லட்சம் ரூபாய் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
இதை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
நவீன மகப்பேறு அறை தனியார் மருத்துவமனைக்கு இணையாக வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடக்கம் தான்.
மாவட்ட நிர்வாகமும் சமூக நிதி மற்றும் மாவட்ட நிர்வாக நிதி வாயிலாக, மருத்துவ துறைக்கு பல்வேறு உதவியினை வழங்கி வருகின்றோம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் தாய் - சேய் மரணம் இல்லாதவாறு நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், கடம்பத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டில்லிபாய், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லட்சுமி, தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் சுபஸ்ரீ, உஷாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.