ADDED : பிப் 06, 2025 10:48 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 65; இவர், கடந்தாண்டு செப்.16ம் தேதி, மத்தூரில் உள்ள வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள மகன் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நவ.27ம் தேதி, சாந்தி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், பித்தளை சாமான்கள், டிவி, வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
இது குறித்து சாந்தி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த மணி, 44, என்பவரை நேற்று கைது செய்தனர்.
