ADDED : அக் 06, 2024 08:30 PM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொசஸ்தலை ஆற்றங்கரையில் நெடியம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தினர். கொசஸ்தலை ஆற்றின் நீர்வளத்தால், நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது, நெடியத்தில் குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
விவசாயிகள் வெயிலில் காய வைக்கும் தானியங்களை நாசம் செய்கின்றன. வயல்வெளியில் உள்ள தென்னந்தோப்புகளும் குரங்கு தொல்லையால் நாசம் அடைந்து வருகின்றன.
இதனால், பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நெடியம் கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை வனப்பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
