/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எம்.ஓ.பி., வைஷ்ணவ் தடகளத்தில் 'சாம்பியன்'
/
எம்.ஓ.பி., வைஷ்ணவ் தடகளத்தில் 'சாம்பியன்'
ADDED : மார் 14, 2024 10:16 PM

சென்னை:சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான தடகள போட்டி, சேத்துப்பட்டில் உள்ள பல்கலையின் விளையாட்டு மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., 5,000 மற்றும் 10,000 மீ., 4*100 ரிலே, குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், 'ஏ' மண்டலத்திற்கு உட்பட்ட எம்.ஓ.பி., - ராணி மேரி, எம்.ஜி.ஆர்., ஜானகி, உள்ளிட்ட கல்லுாரிகளில் இருந்து, 300க்கு மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
அனைத்து வகை போட்டிகளின் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி, 10 தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் என, மொத்தம் 20 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து, ராணி மேரி கல்லுாரி இரண்டாம் இடத்தையும், எஸ்.டி.என்.பி., வைஷ்ணவ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

