/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் வடியாத மழைநீர் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
/
ரயில்வே சுரங்கப்பாதையில் வடியாத மழைநீர் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் வடியாத மழைநீர் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் வடியாத மழைநீர் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ADDED : அக் 13, 2025 01:21 AM

செவ்வாப்பேட்டை:ரயில்வே சுரங்கப்பாதையில் வடியாத மழைநீரால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கடவுப்பாதை 15ல் அமைந்துள்ளது செவ்வாப்பேட்டை ரயில் நிலையம். இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செவ்வாப்பேட்டை, திருவூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
ரயில் நிலையத்தின் அருகே, ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில், 2015-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 660 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
ஏழு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சுரங்கப்பாதை செல்லும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதோடு, சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்த வழியாக அப்பகுதி மக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல், புட்லுார் ரயில் நிலைய அருகே உல்லாசநகர் பகுதியிலும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரை அகற்றி, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், ரயில்வே சுரங்கப்பாதை செல்லும் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.