/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தையுடன் தாய் மாயம் கணவன் போலீசில் புகார்
/
குழந்தையுடன் தாய் மாயம் கணவன் போலீசில் புகார்
ADDED : பிப் 18, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:
சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 26; இவர், கடந்த 16ம் தேதி மாலை, மனைவி அர்ச்சனா, 26 மற்றும் ஆறு வயது பெண் குழந்தையுடன் உறவினர் திருமணத்திற்காக காக்களூர் பைபாஸ் சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார்.
அப்போது மனைவி, குழந்தை மண்டபத்தின் வெளியே நின்று கொண்டிருக்க, ராஜ்குமார் மண்டபத்தின் உள்ளே சென்று விட்டு வெளியே வந்த பார்த்தபோது இருவரும் காணாமல் போனது தெரிய வந்தது.
பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசில், ராஜ்குமார் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

