/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விபத்தில் தாய், மகன் காயம் 5 வயது மகள் உடல் நசுங்கி பலி
/
சாலை விபத்தில் தாய், மகன் காயம் 5 வயது மகள் உடல் நசுங்கி பலி
சாலை விபத்தில் தாய், மகன் காயம் 5 வயது மகள் உடல் நசுங்கி பலி
சாலை விபத்தில் தாய், மகன் காயம் 5 வயது மகள் உடல் நசுங்கி பலி
ADDED : பிப் 13, 2024 06:40 AM
மீஞ்சூர்: மீஞ்சூர், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி, 28. இவரது மகன் கவீன், 7, மகள் எக்ஸ்ராசெல்லம், 5, ஆகியோர் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
காளீஸ்வரியின் தாய் சென்னை திருவொற்றியூர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரை பார்க்க நேற்று மாலை, காளீஸ்வரி மகன் மற்றும் மகளுடன், ஹோண்டா ஆக்டிவா பைக்கில், வல்லுார் - அத்திப்பட்டு புதுநகர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அத்திப்பட்டு புதுநகர் சாண்டி கோவில் அருகே செல்லும்போது, காளீஸ்வரி ஓட்டிச்சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பைக்கின் முன்பகுதியில் நின்று பயணித்த எக்ஸ்ரா செல்லம், உடல் நசுங்கி இறந்தார். காளீஸ்வரி மற்றும் கவீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.