/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டூரில் சுற்றுச்சுவர் இல்லாத குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : பிப் 12, 2025 01:50 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, விநாயகர் கோவில் குளம் உள்ளது. பராமரிப்பு இன்றி கிடந்த இந்த குளம், கடந்த ஆண்டு, 14 லட்சம் ரூபாயில் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது.
குளத்தை ஓட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் சாலை அமைந்து உள்ளது.
இங்கு தடுப்பு சுவர் இல்லததால், அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
எதிர் எதிரே நான்கு சக்கர வாகனங்கள் கடக்கும்போது, சிரமத்துடன் பயணிக்கின்றன. இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வரும் பொதுமக்கள் இருட்டில் குளத்தில் தவறி விழுவதற்கும் வாய்ப்புகளும் உள்ளன.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலையை ஓட்டி அமைந்துள்ள குளக்கரைக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
***