/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆத்துார் பால இணைப்பு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
ஆத்துார் பால இணைப்பு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஆத்துார் பால இணைப்பு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஆத்துார் பால இணைப்பு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : அக் 26, 2024 01:43 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் இருந்து, ஆத்துார், எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில், காரனோடை - ஆத்துார் இடையே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.
பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து, அதன் உறுதிதன்மை குறைத்து வருகிறது. பாலத்தின் மேற்பகுதியிலும் செடிகள் வளர்ந்தும், மண் குவிந்தும் உள்ளது.
மின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரங்களில் கிராமவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோன்று, பாலத்தின் இணைப்பு சாலை பகுதி முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடிகள், மண் குவியல் ஆகியவற்றை அகற்றிடவும், இணைப்பு சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.