/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் 'பேரிகார்டு'கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
நெடுஞ்சாலையில் 'பேரிகார்டு'கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் 'பேரிகார்டு'கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் 'பேரிகார்டு'கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 30, 2024 02:16 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கும் வகையில், திருமழிசை, பாப்பன்சத்திரம், தண்டலம், செட்டிபேடு உட்பட பல இடங்களில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டு தடுப்புகளால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதோடு, விபத்தில் சிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய சட்ட விதிகளின் கீழ் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித தடுப்புகளும் வைக்கக் கூடாது. காவல் துறையினர் நெடுஞ்சாலைத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி, திருவள்ளூர்.