/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் பழுது விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 25, 2025 03:08 AM

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் பழுதடைந்த தானியங்கி சிக்னலால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை 23 கி.மீ.,க்கு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், திருமழிசை - ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரையிலான ஆறு வழிச்சாலை பணி, 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட 10 இடங்களில் போக்குவரத்து காவல் துறை சார்பில், ஓராண்டுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்த தானியங்கி சிக்னல்கள், தற்போது இருங்காட்டுகோட்டை சிப்காட், ஹூண்டாய் கம்பெனி, தண்டலம் - அரக்கோணம் சாலை சந்திப்பு, செட்டிபேடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் செயல்படாமல் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கும் அபாயநிலையும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, பழுதடைந்த தானியங்கி போக்குவரத்து சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

