/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
திறந்தவெளி மழைநீர் கால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திறந்தவெளி மழைநீர் கால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திறந்தவெளி மழைநீர் கால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 09, 2025 03:46 AM

சோழவரம்: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சோழவரம் அடுத்த அத்திப்பேடு, ஜனப்பச்சத்திரம், அழிஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம், மழைநீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இவை உரிய பராமரிப்பின்றி, குப்பை கழிவுகள் குவிந்தும், சேதமடைந்தும் உள்ளன. இதனால், மழைநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், சாலைகளில் குளம்போல் தேங்குகிறது.
மேலும், ஆங்காங்கே கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்வோர், கால்வாய்களில் தவறி விழுந்து, அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
கால்நடைகளும் அதில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இணைப்பு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்களை உரிய முறையில் பராமரிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

