/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலி இல்லாத கோவில் குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
வேலி இல்லாத கோவில் குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 24, 2025 02:18 AM

பெருமாள்பட்டு:பெருமாள்பட்டு பகுதியில் திருக்கண்டீஸ்வர் கோவில் குளத்திற்கு கம்பி வேலி அமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துளளனர்.
திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்கிருந்து புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் ஒருபுறம் மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வர் கோவில் குளமும், மறுபுறம் தாமரை குளமும் அமைந்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரு குளத்தில் தாமரை குளத்திற்கு மட்டும் கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது.
ஆனால் திருக்கண்டீஸ்வரர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்காததால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, திருக்கண்டீஸ்வர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.