/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரவில் எரியாத மின்விளக்கு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
இரவில் எரியாத மின்விளக்கு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இரவில் எரியாத மின்விளக்கு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இரவில் எரியாத மின்விளக்கு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 05, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகம்மாசத்திரம்: கனகம்மாசத்திரம் --- தக்கோலம் நெடுஞ்சாலையில், முத்துக்கொண்டாபுரத்தில் கொசஸ்தலையாற்றை கடக்க நான்கு ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
இந்த உயர்மட்ட பாலத்தை, இரவில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடக்க பாலத்தின் இருபுறமும் உயர்மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உயர்மின் விளக்குகள் கடந்து இரண்டு வாரமாக இரவில் ஒளிர்வதில்லை.
இதனால் பாலம் இருப்பதை அறியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்கை சீரமைத்து இரவில் ஒளிர வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.