/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோரம் குப்பை வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு
/
நெடுஞ்சாலையோரம் குப்பை வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு
நெடுஞ்சாலையோரம் குப்பை வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு
நெடுஞ்சாலையோரம் குப்பை வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு
ADDED : நவ 16, 2025 02:35 AM

திருத்தணி: ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, மாநில நெடுஞ்சாலையோரம் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில், அகூர் கிராமம் மற்றும் காலனி ஆகிய பகுதிகளில் வீடுகளில் இருந்து துாய்மை பணியாளர்கள் மட்கும் மற்றும் மட்கா குப்பை மற்றும் கழிவுகள் போன்றவை, மூ ன்று சக்கர சைக்கிள் மற்றும் பேட்டரி ஆட்டோ மூலம் சேகரிக்கின்றனர்.
இந்த குப்பையை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்காமல், துாய்மை பணியாளர்கள் சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் கொட்டி விடுகின்றனர்.
தற்போது, திருத்தணி - சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம், ஊராட்சியில் சேகரிக்கும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டிவிடுகின்றனர். சில நேர ங்களில் குப்பையை தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு மற்றும் துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலையோரம் குப் பை கொட்டுவதை ஒன்றிய அதிகாரிகள் நேரில் பார்த்தும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, ஊராட்சி குப்பையை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

