/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
பல்லாங்குழியான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 17, 2024 01:39 AM

திருவள்ளூர்,-
திருவள்ளூர் மாவட்டம்பூந்தமல்லி அடுத்துள்ளது திருமழிசை. இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ் சாலை வழியே திருவள்ளூர், திருப்பதி, பெரியபாளையம் என பல பகுதிகளுக்கு தினமும் 50,௦௦௦க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை பகுதியில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நெடுஞ்சாலை சேதமாகி பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு, இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நெடுஞ்சாலையைசீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.