/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாள சாலையில் சிதறிய ஜல்லிகள் திக்குமுக்காடி செல்லும் வாகன ஓட்டிகள்

ADDED : நவ 11, 2025 10:22 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி செல்கின்றனர்.
சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தின் குறுக்கே, கனகம்மாசத்திரம் ----- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
கடந்த வாரம் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றதால், அப்பகுதியில் வாகனங்கள் கடக்கும் இடங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன.
முறையாக சீரமைக்காததால், சாலைக்கும், தண்டவாளத்திற்கும் இடைவெளி உள்ளதுடன், அங்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்றன.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், ஜல்லிக்கற்களால் பஞ்சராகின்றன.
எனவே, வாகனங்கள் கடக்கும் தண்டவாள பகுதியை சீரமைக்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.