/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டும் குழியுமான சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
குண்டும் குழியுமான சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 27, 2025 02:04 AM

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை குண்டும். குழியுமாக இருப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் இ.சி.எல்., தொழிற்சாலை எதிரே, ஆந்திரா மார்க்கத்தில் இணைப்பு சாலை உள்ளது.
நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த இணைப்பு சாலை வழியாக ஆரம்பாக்கம், ஏடூர், கும்புளி உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், இணைப்பு சாலை சேதமடைந்து, பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வழியாக இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடனடியாக இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.