/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய வேகத்தடையால் வாகனஓட்டிகள் அவதி
/
புதிய வேகத்தடையால் வாகனஓட்டிகள் அவதி
ADDED : அக் 13, 2024 01:30 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியும், பள்ளிப்பட்டு செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஆண்கள் மேல்நிலை பள்ளி நுழைவாயில் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டது.
அது குறித்த எச்சரிக்கை பதாகை, சாலையில் பதிக்கும் பிரதிபலிப்பான்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும், அந்த பகுதியில் மரங்கள் அடர்ந்துள்ளதால், நிழல் படர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளால் வேகத்தடையை கவனிக்க முடியவில்லை. இதனால், தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடையை கடக்கும் போது நிலை தடுமாறி விழுந்து எழுந்து செல்கின்றனர்.
நேற்று காலை இந்த வேகத்தடையை வேகமாக கடந்து சென்ற சரக்கு வாகனம் ஒன்று நிலை தடுமாறி குலுங்கியதில், அதில் இருந்து காய்கறி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. இதனால், பின்னால் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேக தடையை பள்ளி நுழைவாயில் எதிரே நிழல் சூழ்ந்த பகுதியில் அமைத்ததற்கு மாறாக, சற்று தொலைவில், வெளிச்சமான பகுதியில் அமைத்திருக்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.