/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாறு பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
நந்தியாறு பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 25, 2024 02:21 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர்-- சூர்யநகரம் ஊராட்சிகள் இடையே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு ஊராட்சி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் 3 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக அகூர் பகுதியில் இருந்து, சூர்யநகரம் வழியாக புச்சிரெட்டிப் பள்ளி, பொதட்டூர்பேட்டை போன்ற இடங்களுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், உயர்பாலம் அருகே இணைப்பு சிமென்ட் சாலை முறைாக போடப்படாததால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் பாலம் அருகே சிமென்ட் சாலையில் திடீர் பள்ளம் மற்றும் விரிசல் ஏற்பட்டது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
இச்சாலையை சீரமைக்காவிட்டால் உயர்மட்ட பாலத்தின் உறுதிதன்மையும் கேள்வி குறியாகும். எனவே மாவட்ட நிர்வாகம், உயர்மட்ட பாலம் அருகே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, அகூர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.