/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 11, 2024 03:03 AM

திருவள்ளூர்,:திருவள்ளூரிலிருந்து மணவாளநகர் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை வழியே தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் தொடுகாடு பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு போக்குவரத்து நெரிசலிலும சிக்கி அவதி்பபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.