/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அவதிப்படும் வாகன ஓட்டிகள்
/
நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அவதிப்படும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அவதிப்படும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அவதிப்படும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 29, 2024 12:48 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர்.
சின்னம்மாபேட்டை, மணவூர், தக்கோலம் திருவாலங்காடைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இச்சந்தைக்கு வந்து காய்கறி வாங்கி செல்வர்.
சந்தையானது தக்கோலம் ---- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் சின்னம்மாபேட்டை நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்படுவதால் லாரி, டிராக்டர், கார் போன்ற வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் மருத்துவ அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் வந்தாலும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் சந்தை கடைகளால், கடந்து செல்ல 30 - 50 நிமிடம் ஆகின்றது. இதனால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது.
சில வாரங்களாக வியாபாரிகள் சிலர் சுய லாபத்திற்காக சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.
எனவே, சந்தையை மாற்று இடத்தில் அமைக்க திருவாலங்காடு பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.