/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் கோரி அமைச்சருக்கு எம்.பி., மனு
/
திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் கோரி அமைச்சருக்கு எம்.பி., மனு
திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் கோரி அமைச்சருக்கு எம்.பி., மனு
திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் கோரி அமைச்சருக்கு எம்.பி., மனு
ADDED : ஆக 04, 2025 10:58 PM
திருவள்ளூர்,திருவள்ளூரில் கூடுதல் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, காங்., - எம்.பி., சகிகாந்த் செந்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்துள்ள மனு:
திருவள்ளூர் ரயில் நிலையத்தை, தினமும் 60 விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன.
அவற்றில், 11 ரயில்கள் மட்டுமே, அங்கு நின்று செல்லும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
அதிக பயணியர் எண்ணிக்கையைக் கொண்ட, வேகமாக வளர்ந்து வரும் புறநகர் மற்றும் தொழில்துறை மையமாக திருவள்ளூர் இருப்பதால், தாம்பரம் போன்ற பிற முக்கிய புறநகர் நிலையங்களுடன் சமமாக நடத்தப்பட வேண்டும் .
இந்தச் சூழலில், இணைப்பை மேம்படுத்தவும், தினசரி பயணியர் மற்றும் நீண்ட துார பயணியரின் சுமையைக் குறைக்கவும், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், கோவை எக்ஸ்பிரஸ். பிருந்தாவன், இன்டர்சிட்டி, லால்பாக், சென்னை -லோகமான்ய திலக் டெர்மினஸ், செங்கல்பட்டு - கச்சேகுடா, நீலகிரி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஒன்பது விரைவு ரயில்களை, நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்.
திருவள்ளூரின் கணிசமான பொது மக்களின் தேவை, சமூக-பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அதிகரித்து வரும் பயணியரின் வருகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுத்தங்கள் அவசியமானவை மற்றும் நியாயமானவை.
இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, சாதகமான நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.