ADDED : டிச 22, 2025 05:18 AM

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் திரு வாலங்காடில் மண் படலம் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவாலங்காடு கிராமம். இங்கு கூட்டுச்சாலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தினமும் 50,௦௦௦திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் சர்க்கரை ஆலை சந்திப்பு முதல் பகவதி பட்டாபிராமபுரம் வரையில் சாலையில் அதிகளவில் மண், கரும்பு சக்கை குவிந்துள்ளது.
இதனால் இவ்வழியே பேருந்து, லாரிகள் செல்லும்போது புழுதி பறப்பதால் பைக்கில் செல்வோர், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர்.
பைக்கில் செல்பவர்கள் மணலில் சறுக்கி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
குவிந்துள்ள மண், கரும்பு சக்கையை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
